அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

1st மார்ச் 2024 10:10

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

அரசகரும மொழிகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டிருப்பது 1991 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழுச் சட்டத்தினூடாகவே. ஆணைக்குழுவின் பிரதான பணிகளாவன இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் நான்காம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மொழி உரிமைகள் மற்றும் அது தொடர்பிலான ஏற்பாடுகளை கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்வதாகும்.

அரசகரும மொழிகள் / இணைப்பு மொழி

இலங்கையின் அரசகரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும். 1978-13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கேற்ப தமிழ் மொழியும் அரசகரும மொழியொன்றாதல் வேண்டும் என்பதுடன் ஆங்கில மொழி இணைப்பு மொழியாதல் வேண்டும்.

தேசிய மொழிகள்

இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் ஆதல் வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது / மாகாண சபை உறுப்பினர் ஒருவரது / உள்ளுராட்சி நிறுவனங்களின் உறுப்பினர் ஒருவரின் உரிமை

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது மாகாண சபையின் அல்லது உள்ளுர் அதிகாரசபையின் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்திலோ அத்தகைய மாகாண சபையிலோ அல்லது உள்ளுர் அதிகார சபையிலோ தேசிய மொழிகளான இரண்டில் எந்தவொரு மொழியிலும் தமது கடமைகளை புரியவும் பணிகளை நிறைவேற்றவும் உரித்துடையராதல் வேண்டும்.

கல்வி மொழி

ஆளொருவர் எந்தவொரு தேசிய மொழியிலும் கல்வி கற்பதற்கு உரித்துடையராதல் வேண்டும். ஏதேனுமொரு உயர்கல்வி நிறுவனமொன்றில் ஒரு தேசிய மொழியில் கற்கைநெறி ஒன்று இருக்குமாயின் அந்த கற்கை நெறி மற்றைய தேசிய மொழியில் கல்வியைப் பெற்றிருக்கும் மாணவர்களுக்காக அந்த தேசிய மொழியிலும் நடாத்துதல் வேண்டும்.

நிர்வாக மொழிகள்

சிங்களமும் தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகும். பிரஜை ஒருவருக்கு தாம் கோரும் அரசகரும மொழியில் அல்லது ஆங்கில மொழியில் அரச நிறுவனங்களில் தமது சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமை உள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்புப் பரீட்சை

அரச சேவைக்கு நபரொருவரை உள்வாங்குவதற்காக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு சிங்களம் அல்லது தமிழ் அல்லது தான் தெரிவு செய்யும் மொழி அல்லது மொழிமூலத்தில் தோற்றுவதற்கு எவரேனும் நபரொருவருக்கு உரிமை உள்ளது.

சட்டவாக்கப் பணிகள்

எல்லா சட்டங்களும் துணைநிலைச் சட்டவாக்கங்களும் மற்றும் அவற்றின் சட்டங்கள் மற்றும் துணைநிலைச் சட்டங்கள் வெளியிடப்படுதலும் ஆங்கில மொழியிலான ஒரு மொழிபெயர்ப்புடன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் ஆகிய இரண்டிலும் இருத்தல் வேண்டும்.

நீதிமன்றங்களின் மொழிகள்

சிங்களமும் தமிழும் நீதிமன்றங்களின் மொழிகளாக இலங்கை எங்கணும் இருத்தல் வேண்டும். தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கும் ஏதேனும் இடப்பரப்பு தவிர்ந்த இலங்கையின் எல்லா இடப்பரப்புகளிலும் அமைந்திருக்கும் நீதிமன்றங்களின் மொழியாக சிங்களம் பயன்படுத்தப்படுதல் வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலமாதல் வேண்டும்.

நீதிமன்ற மொழி தெரியாத தரப்பினருக்கு அரசாங்கத்தினால் மொழிபெயர்ப்பாளர் ஒருவருடைய சேவையைப் பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.

நிகழ்வுகள்

தமிழ் மொழி தினம்

வருடாந்தம் ஒக்டோபர் மாதத்தினுள் தமிழ் மொழி தினம் கொண்டாடப்படுவதுடன்> 2022 ஆம் ஆண்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் இத்தமிழ் மொழி தினத்தினை முன்னிட்டு கொழும்பு கல்வி வலயத்தினுள் தமிழ் மொழிமூலம் மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் 22 பாடசாலைகளில் “மொழி மேம்பாட்டுத் தர வட்ட நிகழ்ச்சித் திட்டத்தினை” முதன்மையாகக் கொண்டு 2022.10.28 ஆம் திகதி இலங்கை மன்றத்தில் விசேட நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வானது பொது நிருவாக> உள்நாட்டலுவல்கள்> மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு எம்.எம்.பீ.கே மாயாதுன்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் “மொழி மற்றும் சமூக நலன்” எனும் கருப்பொருளில் சிறப்புரையொன்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ் பிர~hந்தன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழ் கலாசார நிகழ்வுகளினால் இந்நிகழ்வு மிளிர்ந்தது. இந்நிகழ்வானது தமிழ் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்;ததுடன்> சிறப்பு விருந்தினர்களை வரவேற்றலானது தமிழ் பண்பாட்டிற்கமைய இடம்பெற்றதுடன் கலாசாரச் சின்னங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Oct. 28, 2022

அரசகரும மொழிகள் வாரம் – 2021 கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்

வருடாந்தம் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் இணைந்து 2021 ஆம் ஆண்டில் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரை போட்டிக்காக பாடசாலை மாணவர்களினால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மொழிமூலங்களில் 1210 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இக்கட்டுரைப் போட்டியானது, கொரோனா தொற்று நிலைமையானது நாட்டினுள் நிலவிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும்கூட மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்பினை பெரிதும் பாராட்டுகின்றோம்.

நடுவர்களின் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக அமைந்ததுடன், அந்நடுவர் குழாமானது பல்கலைக்கழக மொழி வல்லுனர்களைக் கொண்டமைந்ததாகும்.

கட்டுரைகளின் மதிப்பீட்டின் போது, சிங்கள மொழிமூல கட்டுரைகள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்களமொழித் துறைத் தலைவர் பேராசிரியர் சந்தகோமி கோப்பரஹேவா அவர்களின் தலைமையிலும், தமிழ் மொழிமூல கட்டுரைகள் களனிப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கவிதா இராஜரத்தினம் அவர்களின் தலைமையிலும் மற்றும் ஆங்கில மொழிமூல கட்டுரைகள் ருகுணு பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். ஜீ. எஸ் சமரவீரகே அவர்களின் தலைமையிலும் இடம்பெற்று வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதற்கமைவாக சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலங்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமானது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Sept. 8, 2022

அரசகரும மொழிகள் ஆணைக்குழு

முக்கியமான இணைப்புகள்